தமிழகத்தில் இந்த 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்.!

தமிழகத்தில் இந்த 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்.!


Heavy-rain-likely-in-a-few-districts

தமிழகத்தின் கடலோர பகுதியில் ஏற்பட்ட வளிமண்டல மேலடுக்கு சூழற்சி காரணமாக 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

tamilnadu

மேலும் இராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக கடலோர பகுதிகள் மற்றும் குமரி கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.