அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தை தாக்கவிருக்கும் கன மழை - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தை தாக்கவிருக்கும் கன மழை - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு



heavy rain in soith tamilnadu

நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று பெய்து வரும் கன மழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்னும் 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த ஒன்றாம் தேதி துவங்கியது வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது. மேலும் தேனி, தென்காசி பகுதிகளில் கனமழை பெய்து வரும் காரணத்தினால் குற்றாலம் அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

heavy rain in soith tamilnadu

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியிருப்பதாவது:

மாலத்தீவு முதல் தெற்கு கொங்கன் வரை குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை பரவி உள்ளது. இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்துள்ளது. 

அந்தவகையில் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தென் மற்றும் வட தமிழகத்தின் ஓரிரு இடங்களில் கனமழையும், மிகக் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என அறிவித்துள்ளது.