தமிழகம்

கள்ளக்குறிச்சி அருகே துப்பாக்கியால் சுட்டு ஒருவர் கொலை.. முதற்கட்ட விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்

Summary:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே நாட்டுத்துப்பாக்கியால் நபர் ஒருவர் சுட்டு கொலைசெய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே நாட்டுத்துப்பாக்கியால் நபர் ஒருவர் சுட்டு கொலைசெய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள சிறுபனைதக்கா கிராமத்தில் வசித்துவந்தவர் ஜான். இவர் இன்று தனது பக்கத்துக்கு வீட்டை சேர்ந்த ஆறுமுகம் என்பவரால் நாட்டுத்துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் ஜானை சுற்று கொலை செய்த ஆறுமுகம் ஒரு மனநலம் குன்றியவர் என்பதும், ஆறுமுகத்தின் தந்தை அப்பா வேட்டையாடுவதற்காக லைசென்ஸ் உடன் வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து அவர் ஜானை சுட்டதும் தெரியவந்துள்ளது.

சென்னையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் நேற்று துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டநிலையில் இன்று கள்ளக்குறிச்சி அருகே நடந்துள்ள மற்றொரு துப்பாக்கி சூடு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement