இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதி, கண்ணிமைக்கும் நேரத்தில் பறிபோன உயிர்; நெஞ்சை பதறவைக்கும் வீடியோ.!Gujarat Ahmedabad Bhulabhai Park Road Two Wheeler Bus Accident 

 

குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத், பூலாபாய் பார்க் கூட்டுச் சாலை சந்திப்பில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பேருந்து ஒன்று இருசக்கர வாகன ஓட்டியின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது. 

இந்த விபத்தை சீர்படுத்தி ஏஎம்டிஎஸ் பேருந்து ஓட்டுநர் அஹ்ரம் என்பவர், பேருந்தை நிறுத்தாமல் அங்கிருந்து தப்பி சென்றார். இந்த விபத்து நடந்த இடத்தில் மக்கள் பலர் இருந்தும், விபத்தை பார்த்த பலரும் அங்கிருந்து வேகமாக கலைந்து சென்றனர். 

பின் சாலையோரம் இருந்தவர்கள் வந்து இளைஞரை பார்த்தபோது அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது. இதனையடுத்து, சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தினர். 

மேலும், ஏஎம்டிஎஸ் போக்குவரத்து கழகமும் ஓட்டுனரை பணிநீக்கம் செய்தது. தற்போது ஓட்டுநர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரிடம் இருந்து ரூ.2 இலட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.