தமிழகம் சமூகம்

திருப்பூரில் கின்னஸ் சாதனை படைத்த வாலிபர் திடீரென தற்கொலை; காதல் திருமணம் காரணமா!

Summary:

guinness record winner hemachandiran suicide

திருப்பூர் மாவட்டம் நல்லூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் ஹேமச்சந்திரன். இவர் கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27ம் தேதி அன்று திருப்பூரில் தனது விரல் நகத்தில் துளையிட்டு 22.5 கிலோ எடையை தூக்கி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றார். ஹேமச்சந்திரன் திடீரென அவரது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

27 வயதான இவர் பிரபல முன்னணி தொலைக்காட்சிகளின் விளையாட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். அத்துடன் மூக்கில் 2 இன்ஞ் டிரில் மெசின் வைத்து இயக்கியும் சாதனை படைத்தார். அதிக கனமுள்ள பொருள்களை ஒற்றை விரல் நகத்தால் தூக்கிக் காட்டுவது உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளார் ஹேமச்சந்திரன்.

record

கடந்த 11 மாதங்களுக்கு முன்னர் ஹேமச்சந்திரன் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் திடீரென நல்லூரில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

இவரது தற்கொலைக்கு காரணம் குடும்பத்தில் ஏதேனும் பிரச்சினையா அல்லது வேறு ஏதும் காரணங்கள் இருக்குமா என காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Advertisement