சினிமா டிக்கெட் விலை குறைப்புக்கு நன்றி தெரிவித்துள்ள பெப்சி சங்கம்.!

சினிமா டிக்கெட் விலை குறைப்புக்கு நன்றி தெரிவித்துள்ள பெப்சி சங்கம்.!



gst tamil movie ticket decease

திரைப்படங்களுக்கான சினிமா டிக்கெட் விலை குறைப்புக்கு நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து பெப்சி சங்கம் ஒரு அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

டெல்லியில் இன்று நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 33 பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளது. அதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்த கூட்டத்தில் 7 பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. 28%இல் இருந்து 18% ஆகவும், மீதமுள்ள 26 பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. 12%இல் இருந்து 5% ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.



 

திரைப்படங்களுக்கான டிக்கெட்டுகளுக்கு வசூலிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரியில், 100 ரூபாய்க்கும் குறைவான டிக்கெட்டுகளுக்கு  இதுவரை 18 சதவிகிதம் விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி வாரியானது இப்பொழுது 12 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. 100 ரூபாய்க்கும் அதிகமான டிக்கெட்டுகளுக்கு 28 சதவிகிதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. எனவே திரையரங்குகளில் டிக்கெட் விலை வெகுவாக குறைய வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில் திரைப்பட தொழிலாளர் நலனுக்காக உருவாக்கப்பட்டுள்ள பெப்சி சங்க நிர்வாகிகள் சினிமா டிக்கெட் விலை குறைப்புக்கு மத்திய அரசை வலியுறுத்தி நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கும் அமைச்சர் ஜெயக்குமாருக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.