செப் 22 முதல் இந்த பொருட்களின் விலை குறையும்! ஆனால் இந்த பொருட்களின் விலை தாறுமாறாக உயரப்போகுது! முழு லிஸ்ட் இதோ..



gst-2-0-major-rate-cut-nirmala

இந்திய வரி அமைப்பில் மிகப்பெரிய மாற்றம் நடைபெற்றுள்ளது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த ஜிஎஸ்டி 2.0 சீர்திருத்தம், நுகர்வோருக்கு விலைக் குறைப்பையும், ஆடம்பரப் பொருட்களுக்கு கூடுதல் வரியையும் கொண்டு வந்துள்ளது.

ஜிஎஸ்டி 2.0 அமைப்பு

ஜிஎஸ்டி கவுன்சிலின் 56வது கூட்டத்தில் 12% மற்றும் 28% வரி அடுக்குகள் நீக்கப்பட்டன. இனி 5% மற்றும் 18% என இரண்டு மட்டுமே இருக்கும். அதோடு, ஆடம்பரப் பொருட்களுக்கு தனிப்பட்ட 40% வரி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வருகிறது.

விலை குறையும் பொருட்கள்

அத்தியாவசியப் பொருட்கள், சோப்புகள், ஷாம்புகள், ஹேர் ஆயில் போன்றவை இப்போது 5% வரியில் கிடைக்கும். பால், பனீர், பராத்தா போன்ற உணவுப் பொருட்களுக்கு முழுமையான விலக்கு வழங்கப்பட்டுள்ளது. பல உயிர்காக்கும் மருந்துகள் வரி விலக்கு பெற்றுள்ளன. சிமெண்ட், ஆட்டோமொபைல்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் 28%-லிருந்து 18% ஆகக் குறைக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: பட்ஜெட் 2025 : விலை உயரப்போகும் (ம) குறையும் பொருட்கள் இவை தானா.?!

விலை அதிகரிக்கும் பொருட்கள்

பான் மசாலா, சிகரெட், குட்கா போன்ற புகையிலைப் பொருட்கள், சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்கள், உயர்தர வாகனங்கள், படகுகள் மற்றும் தனியார் விமானங்களுக்கு புதிய 40% GST வரி விதிக்கப்படும்.

சிறப்பு துறைகளுக்கான நன்மை

கைவினைப்பொருட்கள், பளிங்கு, கிரானைட், தோல் பொருட்கள் போன்ற உழைப்பு மிகுந்த துறைகள் 12%-லிருந்து 5% ஆகக் குறைக்கப்பட்டுள்ளன. இயற்கை மெந்தோல், மனிதனால் உருவாக்கப்பட்ட நார் மற்றும் நூல் ஆகியவற்றின் வரி விகிதமும் குறைக்கப்பட்டுள்ளது.

மொத்தத்தில், ஜிஎஸ்டி 2.0 மாற்றம் பொதுமக்களின் அத்தியாவசியச் செலவைக் குறைப்பதோடு, ஆடம்பரப் பொருட்களை அதிக வரி சுமையால் கட்டுப்படுத்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. இது வரி அமைப்பை எளிமைப்படுத்தி, சமநிலை கொண்ட பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர்.

 

இதையும் படிங்க: அட அட... எவ்வளவு சந்தோசம்! ரூ.62,000 வரை விலை குறைவு! மக்களே மிஸ் பண்ணிட்டாத்தீங்க....