
Government school
இன்று எங்கு பார்த்தாலும் தனியார் பள்ளிகள் தான் அதிகம் காணப்படுகின்றன. இதனால் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்ப்பதற்கான வாய்ப்பு குறைந்து கொண்டே வருகிறது.மேலும் அரசு பள்ளிகள் அங்கங்கே இருப்பதால் தங்களது குழந்தைகளை அங்கு சேர்க்க முடியாமல் போகிறது.
இதனால் அரசு பள்ளிகளின் எண்ணிக்கை குறைந்த தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை தீர்க்கும் வகையில் தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதன்படி ஏற்கனவே 15 அரசு நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலை பள்ளிகளாகவும், 30 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாவும் தரம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
தற்போது பெற்றோர்களிடம் பெறப்பட்ட கோரிக்கைகள் அடிப்படையில் முன்பே அறிவித்த 15 அரசு நடுநிலை பள்ளிகளுக்கு பதில் 50 அரசு நடுநிலை பள்ளிகள் உயர்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என்றும் கூறியுள்ளார்.
அதேபோல் 30 அரசு உயர்நிலை பள்ளிகளுக்கு பதில் 50 அரசு உயர்நிலை பள்ளிகள் மேல்நிலை பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும் என்ற புதிய அறிவிப்பை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
பெற்றோர்களிடம் பெறப்பட்ட கோரிக்கைகள் அடிப்படையில் முன்பே அறிவித்த 15 அரசு நடுநிலை பள்ளிகளுக்கு பதில் 50 அரசு நடுநிலை பள்ளிகள் உயர்நிலை பள்ளிகளாகவும்,
— K.A Sengottaiyan (@KASengottaiyan) March 20, 2020
30 அரசு உயர்நிலை பள்ளிகளுக்கு பதில் 50 அரசு உயர்நிலை பள்ளிகள் மேல்நிலை பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும். #சட்டப்பேரவை_விதிஎண்110
Advertisement
Advertisement