மோகன்லால், பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள எல்2:எம்பூரான் திரைப்படம் வெளியீடு தேதி அறிவிப்பு.!
எல்லா இடத்துலயும் தேடி எதுவும் கிடைக்கல.. கடைசியா அந்த இடத்தை ஸ்கேன் செய்துபார்த்த அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி.
துபாயில் இருந்து சென்னைக்கு கடத்திவரப்பட்ட தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் சென்னை விமானநிலையத்தில் பறிமுதல் செய்தனர்.
துபாயில் இருந்து தனியார் விமானம் மூலம் சென்னை விமானநிலையத்திற்கு வந்த பயணி ஒருவரை சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கமான சோதனைக்கு உட்படுத்தினர். சமீபகாலமாக துபாயில் இருந்து தங்கம் கடத்தப்பட்டுவரும் சம்பவம் அதிகரித்துவருவதால் அதிகாரிகள் தற்போது தீவிர சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில் அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்திய நபரின் உடை, அவர் கொண்டுவந்த பை என எதிலும் சந்தேகப்படும்படி எந்த பொருளும் இல்லை. ஆனாலும் அதிகாரிகள் அவரை விடவில்லை. அவரது உடலுக்குள் ஏதேனும் மறைத்துவைத்து கொண்டுவரப்படுகிறதா என சோதனை செய்ய முடிவு செய்தனர்.
இதனை அடுத்து அவரது உடலை சோதனை செய்தபோது அவரது மலக்குடலில் சுமார் ரூ.26.52 லட்சம் மதிப்பிலான 722 கிராம் எடையிலான தங்கத்தை மறைத்துவைத்து கடத்திவந்தது கண்டறியப்பட்டது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் தொடர்ந்து அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.