இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி.! அதிரடியாக குறைந்த தங்கம் விலை.!இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?

இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி.! அதிரடியாக குறைந்த தங்கம் விலை.!இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?


gold-rate-reduced-VLMN2R

உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் காரணமாக சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் பெட்ரோல், டீசல், கச்சா எண்ணெய் மற்றும் தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. இந்தநிலையில், சில நாட்களாகவே தங்கத்தின் விலை சற்று ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கத்தின் விலை இன்று வெகுவாக சரிந்துள்ளது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து, ரூ.38,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து, ரூ.4,775-க்கு விற்பனையாகிறது.

அதேபோல் சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து ரூ.67.50-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 67,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.