#Breaking: இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க.. தங்கம் விலை அதிரடி குறைவு.!!



gold-price-today-chennai-1-may

இன்றைய தங்கம் விலை சவரனுக்கு ரூ.1640 குறைந்துள்ளது.

உலகளவில் நடைபெறும் போர்கள், பொருளாதார பிரச்சனை உட்பட பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலை என்பது கடுமையான உச்சத்தை சந்தித்து இருக்கிறது. 

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் தங்கத்தின் சவரன் விலை ரூ.50 ஆயிரத்தை கடந்து இருந்த நிலையில், கடந்த 8 மாதங்களுக்கு தொடர்ந்து விலை உயர்ந்து, தற்போது ரூ.80 ஆயிரம் நோக்கி பயணம் செய்கிறது. 

இன்று விலை குறைவு

இந்நிலையில், இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1640 குறைந்து, சவரன் ஆபரண தங்கம் ரூ.70,200 க்கு விற்கப்படுகிறது. கிராம் தங்கம் விலை ரூ.205 குறைந்து, கிராம் தங்கம் ரூ.8775 க்கு விற்கப்படுகிறது. 

Gold price today

ஏற்கனவே தங்கத்தின் விலை ரூ.1 இலட்சம் முதல் ரூ.2 இலட்சம் வரை விலை உயரலாம் என நகை வியாபாரிகள் கூறி வரும் நிலையில், அதனை உறுதி செய்யும் பொருட்டு தொடர்ந்து விலை உயர்ந்து வருகிறது.

வெள்ளியின் விலை இன்று கிலோவுக்கு ரூ.2000 குறைந்து, இன்று கிலோ வெள்ளி விலை ரூ.1,09,000 க்கு விற்பனை செய்யப்படுகிறது.