தமிழகம் லைப் ஸ்டைல்

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க!! துணி வாங்கினால் ஆடு இலவசம்!! இணையத்தில் வைரலாகும் புது விளம்பரம்..

Summary:

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க!! துணி வாங்கினால் ஆடு இலவசம்!! இணையத்தில் வைரலாகும் புது விளம்பரம்..

தீபாவளிக்கு துணி வாங்கினால் ஆடு பரிசாக தரப்படும் என துணிக்கடை ஒன்று விளம்பரம் செய்ததை அடுத்து இணையத்தில் பல்வேறு மீம்கள் உலா வர தொடங்கியுள்ளது.

திருவாரூரில் உள்ள சாரதாஸ் என்ற துணிக்கடை ஒன்றுதான் இந்த வித்தியாசமான விளம்பரத்தை கொடுத்துள்ளது. அந்த கடையில் தீபாவளிக்கு துணி வாங்கினால், இரண்டாவது பரிசாக நான்கு பேருக்கு ஆட்டு கிடாய் ஒன்று தருவதாக அந்த விளம்பரத்தில் கூறப்பட்டுள்ளது.

முதல் பரிசு தங்க நாணயம் என்றும், இரண்டாவது பரிசாக தலா ஒரு ஆட்டுக்கிடாய் நான்கு பேருக்கு வழங்கப்படும் எனவும், மூன்றாவது பரிசாக 25 பேருக்கு பட்டுப்புடவை வழங்கப்படும் எனவும் அந்த விளம்பரத்தில் கூறப்பட்டுள்ளது. பண்டிகை காலம் என்றாலே புது புது விளம்பரங்கள் வரிசைகட்டும் நிலையில், இந்த வித்தியாசமான விளம்பரம் தற்போது இணையத்தில் பரவலாக பேசப்பட்டுவருகிறது.


Advertisement