#Breaking: கோடை வெப்பத்தை தணிக்க வருகிறது கனமழை; சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!



Chennai IMD about rain 5 may 2024


தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாகவே கடுமையான வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. அக்னி நட்சத்திரமும் தொடங்கி இருப்பதால், வெயிலின் தீவிரத்தை மக்கள் தாங்க இயலாமல் அவதிப்படுகின்றனர். 

இந்நிலையில், மே மாதம் 7 ம் தேதி மற்றும் 8 ம் தேதியில் தமிழ்நாட்டில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. 

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மே 7 ம் தேதி நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, தோற்பதரு மாவட்டங்களில் கனமழை பெய்யும். 

அதேபோல, மே 8 ம் தேதியை பொறுத்தமட்டில் நீலகிரி, கோவை, திண்டுக்கல்,, தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

அடுத்த 2 நாட்களுக்கு தமிழ்நாட்டின் வட உள் மாவட்டத்தில் வெப்ப அலை வீசும். வெப்பநிலை இயல்பை விட 2 வரை அதிகரிக்கலாம் என்பதால் மக்கள் கவனமுடன் இருக்கவும் அறிவுறுத்தப்படுகிறது.