ஜி.கே.வாசனுக்கு கொரோனா தொற்று உறுதி...! அவரே வெளியிட்ட தகவல்.!Gk vasan affected by corona

உலகத்தையே உலுக்கிய கொரோனா வைரஸால் சாமானிய மக்கள் முதல் அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டனர். மேலும் கொரோனாவால் ஏராளமானோர் பலியாகினர்.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமெடுத்து  ஓரளவிற்கு கட்டுக்குள் வந்த நிலையில் தற்போது ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள்  அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஜிகே வாசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்று எனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்று மருத்துவ பரிசோதனை செய்து கொண்டேன். பரிசோதனையின் முடிவில் எனக்கு கொரோனோ நோய்த்தொற்று இருப்பது தெரியவந்தது. எனவே மருத்துவரின் ஆலோசனைப்படி நோய்த்தொற்றில் இருந்து குணமாகும் வரை நான் என்னை தனிமைப்படுத்திக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.