16 வயது சிறுமி பலாத்காரம்.. மாமா, அத்தை வெறிச்செயல்.. கண்ணீரில் கதறிய தந்தை.. தமிழகமே அதிர்ச்சி.!

16 வயது சிறுமி பலாத்காரம்.. மாமா, அத்தை வெறிச்செயல்.. கண்ணீரில் கதறிய தந்தை.. தமிழகமே அதிர்ச்சி.!


girl-raped-by-her-relative-in-dhamapuri

16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த உறவினர் மற்றும் அதற்கு உடந்தயாய் இருந்தவர் என இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகம் அருகாமையில் டி.என்.எச்.பி குடியிருப்பு பகுதியில் ஆம்புலன்ஸ் டிரைவர் ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு 2 மனைவிகள் உள்ள நிலையில், முதல் மனைவிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். அதில் மூத்த மகள் தர்மபுரி அரசு பள்ளியில் 11ஆம் வகுப்பு பயின்று வருகிறார்.

இந்த நிலையில், மாணவி குள்ளனூரில் உள்ள தனது அத்தை கவிதா வீட்டிற்கு சென்று, அங்கிருந்து பள்ளிக்கு சென்றுள்ளார். இவரது கணவர் ஓம்சக்தி. இவர் டெம்போ டிரைவராக பணியாற்றுகிறார். இதனைத் தொடர்ந்து கடந்த 11ஆம் தேதி மாணவி பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்த நிலையில், கவிதா அவரை மாமா உன்னை கூப்பிடுகிறார் என கூறியுள்ளார்.

அப்போது 'மாமா ஆசைப்படும் அனைத்தையும் நீ செய்ய வேண்டும், அவர் சொல்வதை நீ கேட்கவேண்டும். இல்லையெனில் உனது தாயை கொன்று விடுவோம்' என்று மிரட்டியுள்ளார். இருப்பினும் அதற்கு மாணவி மறுப்பு தெரிவித்துள்ளார்.

Dharmapuri

ஆனால் அவரை வலுக்கட்டாயமாக இழுத்து சென்று படுக்கை அறைக்குள் தூக்கி வீசியுள்ளனர். மேலும், அவரது வாயில் துணியை வைத்து அடைத்து மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த நிலையில், இது குறித்து உனது பெற்றோரிடம் கூறினால் உன்னையும் கொலை செய்து விடுவோம் என மிரட்டி இருக்கின்றனர்.

இதனால் மாணவி மனதளவிலும் உடல் அளவிலும் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில், தனது தந்தையிடம் வீட்டிற்கு சென்று இது குறித்து கூறியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ந்த பெற்றோர், 'மகளை பத்திரமாக பார்த்துக் கொள்வார்கள் என அனுப்பி வைத்தால் இப்படி செய்து விட்டார்களே' என கதறி அழுதுள்ளார்.

அத்துடன் இந்த விஷயம் தொடர்பாக மாணவியின் பெற்றோர் தர்மபுரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், வழக்கு பதிந்த காவல்துறையினர் ஓம் சக்தி மற்றும் கவிதா ஆகிய இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.