என் காதலன் எங்கே..? புது மனைவி ஏக்கத்தில் காதலன்..! காதலன் வீட்டின் முன்பு காதலி தர்ணா..! பரபரப்பு சம்பவம்..!Girl friend protest in front of lover house

விழுப்புரம் மாவட்டத்தில் காதலன் வீட்டின் முன்பு காதலி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அடுத்து உள்ள வசந்தகிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மகள் அன்பரசி. 23 வயதாகும் அன்பரசியும் அதே பகுதியை சேர்ந்த மாரிமுத்து என்பவரது மகன் விஸ்வநாதனும்(27) கடந்த 6 வருடங்களுக்கு மேலாக காதலித்துவந்ததாக கூறப்படுகிறது.

காதல், கல்யாணம் என்ற பெயரை கூறி விஸ்வநாதன் அன்பரசியுடன் பலமுறை உல்லாசமாகவும் இருந்துள்ளார். இதனிடையே விஸ்வநாதனுக்கு திருமணம் செய்துவைக்க அவரது பெற்றோர் வேறொரு பெண்ணை பார்த்து அந்த பெண்ணுடன் கடந்த மாதம் நிச்சயதார்த்தமும் நடந்துள்ளது.

Love

இந்த தகவல் அன்பரசிக்கு தெரியவர, தான் ஏமாற்றப்பட்டது குறித்து விழுப்புரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். ஆனால் இந்த வழக்கில் அன்பரசிக்கு ஆதரவாக எந்த முன்னேற்றமும் ஏற்படாதநிலையில், மன அழுத்தத்திற்கு ஆளான அன்பரசி விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

தற்போது சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அன்பரசி, நாளை மறுநாள் தனது காதலனுக்கும் வேறொரு பெண்ணிற்கும் திருமணம் நடைபெற இருப்பதை அறிந்து, என் காதலன் எங்கே? என எழுதப்பட்ட பலகையுடன் காதலன் வீட்டின் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

விஷயம் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தகுந்த நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து அன்பரசி தனது தர்ணா போராட்டத்தை கைவிட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.