பயிற்சி மருத்துவர்களிடம் கஞ்சா பறிமுதல்; சென்னையில் அதிர்ச்சி சம்பவம்.!



Ganja Captured at Medical College Students

சென்னையில் உள்ள சென்ட்ரல் பகுதியில், மருத்துவ பயிற்சி மாணவர் தங்கும் விடுதி செயல்ப்பட்டு வருகிறது. இங்கு போதைப்பொருள் கடத்தல் கும்பல், போதைப்பொருள் விற்பனை செய்வதாக தகவல் வெளியாகியது.

இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த கல்லூரி முதல்வர் தலைமையிலான அதிகாரிகள், மாணவர்களின் விடுதியில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

chennai

அச்சமயம், பயிற்சி மருத்துவரான தருண் (வயது 23), ஜெயந்த் (வயது 23), சஞ்சய் ரத்தினவேல் (வயது 23) ஆகியோரின் அறையில் 150 கிராம் கஞ்சா, வலி நிவாரணி மருந்து குப்பிகள் கண்டறியப்பட்டது.

இதையும் படிங்க: ஐஸ்கிரீம் விற்பனையாளருக்கு நேர்ந்த சோகம்.. சாலையை கடக்கும்போது கார் மோதி துயரம்.. பரிதாப பலி.!

இந்த விஷயம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை முன்னெடுத்தனர்.

மேலும், 3 மருத்துவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டார். மற்றொருவர் தலைமறைவாகினார். இந்த விஷயம் குறித்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்திய காவல்துறையினர், போதை பொருட்களை விற்பனை செய்ததாக சைதாப்பேட்டை, சின்னமலை பகுதியைச் சேர்ந்த 26 வயது நபரை கைது செய்தனர். அவரிடம் இருந்து உயர் ரக கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.

 

இதையும் படிங்க: 9 வயது சிறுவனிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட 13 வயது சிறுவன்.. சென்னையில் அதிர்ச்சி.!