தமிழகம்

இலவசமாக வழங்கப்பட்ட சிக்கன் 65..! குறைந்தவிலை முட்டை..! அலைமோதிய கூட்டம்.!

Summary:

Free chicken 65 sale in pondichery due to corono rumor

கொரோனா வைரஸ் பயத்தை அடுத்து பல்வேறு தொழில்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சிக்கன் சாப்பிடுவதால் கொரோனா பரவுவதாக கிளம்பிய வதந்தியை அடுத்து முட்டை, சிக்கன் விலை கடுமையாக குறைந்து பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளது.

இந்நிலையில், புதுச்சேரி சுல்த்தான்பேட்டை பகுதியில்  கோழி மற்றும் முட்டை கடை நடத்தி நடத்திவரும் நசீர் அகமது என்பவர் கோழி கறி சாப்பிடுவதால் ஆபத்து இல்லை என்பதை நிரூபிக்க சிக்கன் 65 செய்து இலவசமாக மக்களுக்கு கொடுத்துள்ளார். அதேநேரத்தில் முட்டையும் மிக குறைவான விலைக்கு விற்பனை செய்துள்ளார்.

30 முட்டைகளை கொண்ட ஒரு அட்டை ரூ. 50 க்கும், ஒரு கிலோ சிக்கன் 70 ரூபாய்க்கும் உயிருடன் கோழி 50 ரூபாய்க்கும் விற்கப்பட்டுள்ளது. குறைந்த விலை முட்டையையும், இலவச சிக்கன் 65 யையும் வாங்க, மக்கள் கூட்டமாக கூடியதால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


Advertisement