குடும்ப தகராறில் குடும்பத்தில் உள்ள நான்கு பேர் தீ வைத்துக் கொலை.. கடலூரில் அதிர்ச்சி சம்பவம்...!

குடும்ப தகராறில் குடும்பத்தில் உள்ள நான்கு பேர் தீ வைத்துக் கொலை.. கடலூரில் அதிர்ச்சி சம்பவம்...!


Four members of the family set fire to death in a family dispute.. Shocking incident in Cuddalore...

கடலூரில் குடும்ப சண்டை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் தீ வைத்து எரித்து கொலை செய்யப்பட்டுள்ளனர். 

கடலூர் மாவட்டம் செல்லங்குப்பம் வெள்ளி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மனைவி தமிழரசி. இந்த தம்பதிக்கு ஆசினி என்ற எட்டு மாத கைக்குழந்தை உள்ளது. தமிழரசி யின் அக்காவான தனலட்சுமிக்கும் அவரது கணவர் சத்குரு க்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. 

வழக்கம்போல் தனலட்சுமிக்கும் அவரது கணவருக்கும் பிரச்சனை ஏற்பட்டதால். கோபித்துக் கொண்டு தனலட்சமி குழந்தையுடன் சகோதரி தமிழரசி வீட்டுக்கு வந்துள்ளார். கணவர் சர்குரு தமிழரசி வீட்டுக்கு வந்து தன்னுடன் சேர்ந்து வாழ வருமாறு மனைவியை அழைத்துள்ளார். 

அப்போது, தனலட்சுமிக்கும், சர்குருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த சர்குரு அங்கு இருந்த தமிழரசி, தனலட்சுமி,  இரண்டு குழந்தைகள் மீது டீசலை ஊற்றி தீ வைத்துள்ளார். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கதத்தினர் ஓடி வந்து பார்ப்பதற்குள் தமிழரசி, சர்குரு, இரண்டு குழந்தைகள் உட்பட நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். 

படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த தனலட்சுமி மீட்கப்பட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.