தர்பார் படத்தை திரையரங்கில் பார்க்கமாட்டோம்! விவசாயிகள் கூறும் அதிர்ச்சி காரணம்!

தர்பார் படத்தை திரையரங்கில் பார்க்கமாட்டோம்! விவசாயிகள் கூறும் அதிர்ச்சி காரணம்!


formers-talk-about-darbar-movie

நடிகர் ரஜினிகாந்த் நடித்த தர்பார் திரைப்படம் இரண்டு தினங்களுக்கு முன்பு உலகம் முழுவதும்  7000 திரைகளில் வெளியிடப்பட்டு உள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் ஏஆர் முருகதாஸ் இயக்கியிருந்தார்.

பொங்கல் விருந்தாக வெளியாகியிருக்கும் தர்பார் திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த வயதிலும் இப்படிப்பட்ட ஸ்டெயிலில் ரஜினியால் மட்டுமே நடிக்க முடியும் என ரசிகர்கள் பேசிவருகின்றனர். 

தர்பார் படம் தமிழ்நாட்டில் முதல் நாளில் மட்டும் சுமார் 18 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. தர்பார் படம் குறித்து பட்டணத்தில் வசிக்கும் நபர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு பெரும்பாலானோரின் கருத்துகள் ரஜினியின் ஸ்டெயிலிற்காகவே இந்த படத்தை பார்க்கலாம் என கருத்து தெரிவித்தனர். 

formers

இந்தநிலையில் தென்மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் பலர் ரஜினியின் ரசிகர்களாக உள்ளனர். அதற்கு காரணம் அவர் நடித்த முரட்டு காளை. எந்த படத்திலும் ஜல்லிக்கட்டு காளைகள் பற்றிய காட்சிகள் வந்தாலே அதற்கு விவசாயிகளின் ஆதரவு அதிகமாக இருக்கும், அந்தவகையில் ரஜினி நடித்த முரட்டுக்காளை படம் பல விவசாயிகளை கவர்ந்தது.

இந்தநிலையில், விவசாயிகளிடம் தர்பார் படம் குறித்து உங்களின் கருத்துக்கள் என்ன என்று கேட்கப்பட்டது. அதற்கு அதிர்ச்சி தகவல்களை பகிர்ந்துள்ளனர். ரஜினி சூப்பர் ஸ்டார் என தமிழக மக்கள் கொண்டாடி வருகின்றனர். அதற்கு காரணம் அவரது நடிப்புதான். ஆனால் எங்களுக்கு தர்பார் படம் திரையரங்கில் பார்ப்பதற்கு விருப்பமில்லை. அதற்க்கு முக்கிய காரணம் திரைப்படத்தின் டிக்கெட் விலை தான் என தெரிவித்தனர்.

விவசாயிகள் கடினப்பட்டு உழைத்து விளைச்சல் எடுத்த நெல் ஒரு மூட்டை 900 ரூபாய் தான் விற்பனை ஆகிறது. ஆனால் தற்போது ரிலீஸ் ஆகும் படங்களின் முதல் நாள் டிக்கெட் விலை 400, 600வரை விற்கப்படுகிறது. எனவே எங்களுக்கு திரையரங்கில் படம் பார்க்கும் எண்ணம் கொஞ்சம் கூட வருவதில்லை. ஆனாலும் திரைப்படங்கள் வெளியாகி சில நாட்களிலே தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப படுகின்றன. அதை தான் பார்த்து வருகிறோம் என கருத்துகளை தெரிவித்தனர்.