தமிழகம்

கண்ணான கண்ணே.. பாடலை புரட்டிப்போட்ட விவசாயி இளைஞன்! குவிந்து வரும் பாராட்டுக்கள்!

Summary:

formar youngster singing song

 

விவசாயி சேற்றில் கால் வைத்தால்தான் சக மனிதர்களும் சோற்றில் கால் வைக்க முடியும் என்பது பழமொழி அல்ல. அதுவே உண்மையின் நிதர்சனம். இந்த நாட்டின் மூலதனமே விவசாயம் மட்டும்தான். மனிதன் அன்றாட உயிர் வாழ்வதற்கு விவசாயம் இல்லாவிட்டால், மனித உயிர்களே வாழ முடியாது. மனிதர்கள் மட்டுமின்றி அனைத்து வகை உயிரினங்களும் விவசாயத்தையே சார்ந்து வாழ்கின்றன.

 சமீபகாலமாக படித்த இளைஞர்களும் விவசாயத்தில் இறங்கி ஆர்வம் காட்டி கலக்கி வருகின்றனர். ஆனாலும் தமிழகத்தில் போதிய மழை இல்லாத காரணத்தால் விவசாயம் சற்று தளர்ந்து கிடக்கின்றது. இருந்தாலும் நமது நாட்டின் வளர்ச்சிக்காகவும் மக்களின் உயிரை காக்கும் விவசாயத்தை,  படித்து பொறியியல் பட்டம் பெற்ற இளைஞர்கள் கூட, தற்போது களத்தில் இறங்கி விவசாயமே தங்களது உயிர் எனக்கருதி விவசாயத்தில் தீவிரமாய் செயல்பட்டு வருகின்றனர்.

 இந்த நிலையில் கடந்த வருடம் பொங்கலுக்கு தல அஜித் நடித்து வெளியான விசுவாசம் படத்தில், கண்ணான கண்ணே.. என்னும் பாடல் ஒட்டு மொத்த தமிழக மக்கள் மனதிலும் ஆழமாய் பதிந்தது. இந்த நிலையில் இளைஞர் ஒருவர் இந்தப் பாடலை விவசாயத்துடன் ஒப்பிட்டு, மிகவும் அழகாகவும்,  சிறப்பாகவும், கூர்ந்து கவனிக்கும் அளவில் வியக்கத்தக்க அளவில் பாடி அசத்தியுள்ளார். தற்போது இந்த பாடல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்தப் பாடலைப் பாடிய தமிழக இளைஞருக்கு ஏராளமான பாராட்டுகள் குவிந்து வருகின்றன.


Advertisement