மழையின் காரணமாக ஏற்பட்ட விமான சேவை பாதிப்பால் பயணிகள் அவதி!!

மழையின் காரணமாக ஏற்பட்ட விமான சேவை பாதிப்பால் பயணிகள் அவதி!!


Flights delay due to heavy rain in chennai

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு கனமழை பெய்தது. இதனால் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

நேற்று நள்ளிரவு நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. சென்னை மற்றும் புறநகரில் விடிய விடிய மழை பெய்த காரணமாக வானிலை மிகவும் மோசமானது.

இதனால் சென்னை மீனம்பாக்கத்தில் இருக்கும் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிருக்க வேண்டிய டெல்லி, கொல்கத்தா மற்றும் ஜெர்மனியில் இருந்து வந்த விமானங்கள் தரையிறங்குவதற்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.

இதனால் விமானங்கள் அனைத்தும் பெங்களூருக்கு அனுப்பப்பட்டது. மேலும் எட்டு விமானங்கள் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டதால் பயணிகளுக்கு மிகவும் சிரமம் ஏற்பட்டுள்ளது.