இன்ஸ்டாகிராமில் குவிந்த லைக்குகளால் தகராறு; கல்லூரி மாணவனுக்கு கத்திகுத்து: பரபரப்பு பின்னணி..!

இன்ஸ்டாகிராமில் குவிந்த லைக்குகளால் தகராறு; கல்லூரி மாணவனுக்கு கத்திகுத்து: பரபரப்பு பின்னணி..!


five-people-have-been-arrested-for-stabbing-a-student-i

கல்லூரி மாணவர்களுக்குள் இன்ஸ்டாவில் ரீல் வீடியோ போடுவதில் ஏற்பட்ட தகராறில் மாணவனை கத்தியால் குத்திய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் சார்லஸ் அவருக்கு வயது(19). அதே முடிச்சூர் பகுதியைச் சேர்ந்த பிரியதர்ஷன் (19). இருவரும் ஒரே பகுதியைச் சேர்ந்த பள்ளி நண்பர்கள். இதனை தொடர்ந்த்து சென்னை பல்லாவரம் ரேடியல் சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் தனித்தனியே இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போட்டு வந்துள்ளனர்.விளையாட்டாக ரீல்ஸ் போட்டுக் கொண்டிருந்த நிலையில், 
சார்லஸ் வெளியிடும் வீடியோவிற்கு அதிக லைக்குகள் வந்துள்ளது. கல்லூரியில் சக மாணவர்களிடையே  நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது. 

சார்லஸ்க்கு கிடைத்த  அளவிற்கு லைக்ஸ் பிரியதர்ஷனுக்கு கிடைக்கவில்லை இதனால் நண்பர்கள் இருவருக்கும் இடையே வீடியோ போடுவதில் போட்டி ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த பிரியதர்ஷன், சார்லஸை இனி நீ வீடியோ வெளியிடக்கூடாது என மிரட்டியுள்ளார். இதை எதையும் கண்டுக்கொள்ளாத சார்லஸ் தொடர்ந்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பிரியதர்ஷனை கிண்டல் செய்வது போன்று கே.ஜி.எப் படத்தில் வரும் வசனத்தை வைத்து வீடியோ வெளியிட்டுள்ளார். 

Pallavaram

இதில், ஆத்திரமடைந்த பிரியதர்ஷன் கடந்த 23 ஆம் தேதி கத்தி உள்ளிட பயங்கர ஆயுதங்களுடன்  நண்பர்களுடன் கல்லூரி வாசலில் காத்திருந்துள்ளார். மதியம் கல்லூரி முடிந்து சார்லஸ் வெளியே வந்ததும் இந்த கும்பல் அவரை தாக்க முயன்றுள்ளது . ஆனால் சார்லஸ் மீண்டும் கல்லூரி உள்ளே ஒடி ஒளிந்நு கொண்டார்.

இதனால் ஆத்திரமடைந்த பிரியதர்தன் மற்றும் அவரின் நண்பர்கள் சார்லஸின் நண்பர் ஒருவரை கத்தியால் தலை, கை, கால்களில் தாக்கிவிட்டு தப்பியோடியுள்ளனர். இதில் படுகாயமடைந்த மாணவரை மீட்ட சக மாணவர்கள், குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். 

சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பல்லாவரம் காவல்துறையினர் கல்லூரி மாணவரை தாக்கிய தாம்பரம் பகுதியை பிரணவ், புது பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்த தமிழரசு, சந்தோஷ் , நந்தகுமார் மற்றும் ஒரு சிறுவர் உள்ளிட்ட 5 பேரை கைது செய்துள்ளனர்.