தமிழகம்

கூட்டிட்டு வாங்கடா சீமான..! டிக் டாக் வீடியோவால் நேர்ந்த விபரீதம்! கம்பி என்னும் இளைஞர்கள்!

Summary:

Five members arrested in thambaram for tik tok video

டிக் டாக் செயலியை பயன்படுத்தாதவர்களை பார்ப்பது என்பது மிகவும் அரிதாகிவிட்டது. அந்த அளவிற்கு இளைஞர்கள் மத்தியில் டிக் டாக் செயலி பிரபலமாக உள்ளது. பலர் தங்கள் திறமைகளை இந்த உலகிற்கு வெளிப்படுத்த டிக் டாக் செயலியை நல்ல முறையில் பயன்படுத்தினாலும் ஒருசிலர் இதனை தவறான வழிக்கும் பயன்படுத்தத்தான் செய்கின்றனர்.

அந்த வகையில் சென்னை தாம்பரம் பகுதியைச் சேர்ந்த மணி, சுரேஷ், கிஷோர், அஜித், நிஷாந்த் ஆகியோர் பட்டா  கத்தியைக் காட்டி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு மிரட்டல் விடுத்துள்ளனர்.

பட்டா கத்தியுடன் பாட்டு பாடியிருக்கும் அந்த நபர்கள் கத்தியை காட்டி கூப்டு வாங்கடா உங்க சீமான என மிரட்டல் தோனியுடன் வீடியோ வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை அடுத்து தாம்பரம் போலீசார் அந்த 5 பேரையும் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர். மேலும், குறிப்பிட்ட வீடியோ டிக் டாக்கில் இருந்து டெலிட் செய்யப்பட்டுள்ளது.


Advertisement