என் பொண்டாட்டியையா அசிங்கமா திட்டுற.. ஆத்திரமடைந்த கணவனின் பதறவைக்கும் செயல்., கதறிய பெண்..!fishmonger-killed-by-a-man-in-chennai

மனைவியை மீன் வியாபாரி ஆபாசமாக திட்டியதால், அவரை கணவன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் உள்ள பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் பகுதியை சேர்ந்தவர் பாண்டியன். இவர் நாகல்கேணி மீன் மார்க்கெட்டில் வேலை செய்து வரும் நிலையில், அதே இடத்தில் வேலை செய்யும் சிரஞ்சீவி என்பவருடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை மது அருந்தியுள்ளார். அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்ட நிலையில், அது கைகலப்பாக மாறியதால் ஆவேசமடைந்த பாண்டியன் சிரஞ்சீவியின் வீட்டிற்கு சென்று அவரது மனைவி பவானியை ஆபாசமாக திட்டியுள்ளார்.

chennai

இதுகுறித்து அறிந்த சிரஞ்சீவி கோபமுற்று தனது நண்பர் ஹரியுடன் சேர்ந்து பாண்டியனை சரமாரியாக வெட்டியுள்ளார். இதனை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக கொலையாளிகளை மடக்கி பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். மேலும், ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய பாண்டியனை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதற்கிடையில் காவல்துறையினர் ஹரி மற்றும் சிரஞ்சீவி இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். காவல்துறையினர் கணவரை கைது செய்து செல்வதை கண்ட பெண்மணி கண்ணீருடன் கதறியது காண்போரை சோகத்திற்கு உள்ளாக்கியது.