64 நாட்கள் நடுக்கடலில் தவித்த 7 மீனவர்கள்: சக மீனவர்களால் பத்திரமாக மீட்பு..!Fishermen stranded in the middle of the sea for 64 days were safely rescued by their fellow fishermen

பாண்டிச்சேரி மாநிலம், காரைக்கால் அருகேயுள்ள காரைக்கால் மேடு மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவருக்கு சொந்தமான பைபர் படகில், அதே கிராமத்தை சேர்ந்த பாலாஜி, முருகானந்தம், வேலுச்சாமி உள்ளிட்ட 7 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.

இந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பே கரை திரும்பியிருக்க வேண்டிய படகு வரவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து, காரைக்கால் மேடு மீனவ பஞ்சாயத்தினர் காரைக்கால் கடலோர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும் இந்திய கடலோர காவல்படை மற்றும் காரைக்கால் மேடு பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 6 படகுகளில் சென்று மாயமான மீனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது படகு பழுதானதால், கரை திரும்ப முடியாமல் 64 நாட்களாக கடலில் தவித்த 7 மீனவர்களை சக மீனவர்கள் கண்டறிந்து பத்திரமாக மீட்டனர். இதையடுத்து அனைத்து மீனவர்களும் பத்திரமாக காரைக்கால் மேடு பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.