ஒரே நாள் இரவில் கோடீஸ்வரர் ஆன மீனவர்.! வலையில் சிக்கியது என்னன்னு பார்த்தீர்களா.!

ஒரே நாள் இரவில் கோடீஸ்வரர் ஆன மீனவர்.! வலையில் சிக்கியது என்னன்னு பார்த்தீர்களா.!



fisherman-who-became-a-millionaire-overnight

மும்பையில் மீனவர் ஒருவர் ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆகியுள்ளார். 

மும்பை அருகே உள்ள பால்கர் மாவட்டம் மர்பி கிராமத்தில் வசித்து வருபவர் சந்திரகாந்த் டாரே. இவர் மீன்பிடி தொழில் செய்துவருகிறார். மீன்கள் இனப்பெருக்க காலத்தை ஒட்டி மீன்பிடி தடைக்காலம் அறிவிக்கப் பட்டிருந்தது. மீன்பிடி தடைக்காலம் முடிந்ததையடுத்து, கடந்த 28ம் தேதி, முதல் முறையாக தனது படகில் மீன்பிடிக்கச் சென்றார். 

முதல் நாளிலேயே அவருக்கு அதிர்ஷ்டம் காத்திருந்தது. வலையில் மிக அதிக அளவிலான மீன்கள் சிக்கின. உடனடியாக வலையை இழுத்ததில் சந்திரகாந்த் வலையில் சுமார் 150 கோல் வகையான மீன்கள் வரை இருந்தன. அவருடன் மீன்பிடிக்கச் சென்றவர்கள் வலையில் சிக்கிய மீன்களைப் பார்த்ததும் பெரும் ஆச்சரியம் அடைந்தனர். அந்த வகை மீன்கள் அனைத்தும் அதிக விலை போகக்கூடிய கோல் மீன்கள்.

கோல் மீன் சுவையான உணவு மட்டுமல்லாது, பல மருத்துவ குணங்களை கொண்டது. இது பல்வேறு நாடுகளில் மிகவும் விலை மதிப்புமிக்கது. இந்த மீனின் பாகங்கள் மருந்துகள் மற்றும் பிற விலை உயர்ந்த பொருட்கள் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படுகின்றன. கரைக்கு திரும்பிய சந்திரகாந்த் அதிசய மீன்களை ஏலம் விட்டார். அவை அனைத்துமே சுமார் 1.33 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டன.