முதலில் வரும் 200 பேருக்கு 1 ரூபாய்க்கு 1 சட்டை: KGF பெயரால் பரபரப்பை எகிற வைத்த ஜவுளி கடை..!

முதலில் வரும் 200 பேருக்கு 1 ரூபாய்க்கு 1 சட்டை: KGF பெயரால் பரபரப்பை எகிற வைத்த ஜவுளி கடை..!



First 200 people get 1 shirt for 1 rupee

தஞ்சாவூர் மாவட்டம்,  பாபநாசம் புதிய பேருந்து நிலையம் அமைந்துள்ள பகுதியில் கே.ஜி.எப் என்ற பெயரில் புதிதாக ஆண்களுக்கான பிரத்தியேக ஆடை விற்பனை நிலையம் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த கடையில் தீபாவளியை முன்னிட்டு சிறப்பு விற்பனையாக 200 நபர்களுக்கு ஒரு ரூபாய்க்கு சட்டை விற்பனை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியானது.

மேலும் இந்த தகவல் வாட்ஸ்-அப் செய்லி மூலம் வாடிக்கையாளர்கள் மற்றும் பொது மக்களுக்கு அளிக்கப்பட்டிருந்தது. இந்த சிறப்பு தள்ளுபடி விற்பனையை முன்னிட்டு கே.ஜி.எப் ஆண்கள் ஆடை விற்பனை நிலையத்தின் முன்பு நேற்று ஏராளமானோர் கூடினர். முதல் விற்பனையை அதன் உரிமையாளர் துவக்கி வைத்தார். இந்த சிறப்பு தள்ளுபடி விற்பனை குறித்து உரிமையாளர்  கூறியதாவது:- 

பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்கள் பயன்பெறும் வகையில்  பண்டிகை காலங்களில், முதலில் வரும் 200 பேருக்கு  ரூ.1க்கு 1 சட்டை விற்பனையை தொடங்கியுள்ளோம். இந்த சலுகை திட்டத்தை தொடர்ந்து இனி வரும் காலங்களிலும் செயல்படுத்த உள்ளோம் என்று கூறினார். 1 ரூபாய்க்கு 1சட்டை சிறப்பு விற்பனையில் சட்டை வாங்க பாபநாசம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் அந்த கடையின் முன்பு குவிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.