தமிழகம்

வெடிவிபத்தில்19 பேர் பலியான சோகம் மறைவதற்குள் மற்றொரு பட்டாசு ஆலையில் வெடிவிபத்து.!

Summary:

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அச்சங்குளத்தில் நேற்று பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்ப

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அச்சங்குளத்தில் நேற்று பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டு 19 பேர் பரிதாபமாக பலியானார்கள். இந்த விபத்தில் தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட பலர் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகின்றனர். காயமடைந்தவர்கள் அனைவரும் கோவில்பட்டி, தூத்துக்குடி, சிவகாசி, விருதுநகர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சோகம் மறைவதற்குள் மற்றொரு பட்டாசு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி காக்கிவாடன்பட்டி பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தகவல் அறிந்த தீயணைப்பு படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். 

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள காக்கிவாடன்பட்டியில் கே.ஆர்.பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் 70க்கும் மேற்பட்டோர் இன்று காலையில் பணியாற்றி கொண்டிருந்துள்ளனர். வெடிமருந்து கலவைகளை உள்ளே செலுத்த முற்பட்டபோது எதிர்பாராதவிதமாக வெடி விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. 
 


Advertisement