தமிழகம்

சென்னை சில்க்ஸ் கடையில் திடீர் தீ விபத்து! துணிகள் எரிந்து நாசமாகியாது!

Summary:

fire in chennai silks


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ‌உள்ள சென்னை சில்க்ஸ் ஜவுளிக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள துணிகள் எரிந்து நாசமாகின.

கோவில்பட்டி சென்னை சில்க்ஸ் 3 தளங்களில் இயங்கி வருகிறது. இந்தநிலையில் இன்று அதிகாலையில் திடீரென அந்த கடாயில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அந்த கடையில் தீ, கொழழுந்து விட்டு எரிந்தது. இதனையடுத்து தீயணைப்புநிலையங்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதிகாலையில் கடை பூட்டியிருந்த நேரத்தில் தீ விபத்து ஏற்பட்டதால், ‌உயிர் சேதம் ‌ஏதும் ஏற்படவில்லை.

இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான துணிகள் எரிந்து நாசமாகி உள்ளது என கூறப்படுகிறது.  இதேபோல் 2017ம் ஆண்டு சென்னை தியாகராயா நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


 


Advertisement--!>