நடிகர் அரவிந்த் சாமியின் அப்பா யார் தெரியுமா? பலரும் அறியாத உண்மை!
#Breaking: அதிமுக கூட்டத்தில் சலசலப்பு.. நாற்காலி வீசி தாக்குதல்.. முன்னாள் அமைச்சர் முன் பரபரப்பு சம்பவம்.!
ஈரோடு மாவட்டத்தில் இன்று அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஈரோட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற நிலையில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டார்.
செயல்வீரர்கள் கூட்டம் நிறைவுபெற்ற நிலையில், அந்தியூர் நிர்வாகிகள் தங்களை செயல் வீரர்கள் கூட்டத்திற்கு அழைக்கவிலை என முன்னாள் அமைச்சரிடம் குற்றசாட்டை முன்வைத்து இருந்தனர்.
இதையும் படிங்க: #Breaking: 'அப்பா'-வை படுகேவலமாக வருணித்து ஜெயக்குமார்.. கழுவி ஊற்றி பரபரப்பு பேச்சு.!
#JUSTIN ஈரோடு: அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்ற கூட்டத்தில் கைகலப்பு#Erode #sengottaiyan #ADMK #News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ pic.twitter.com/Rcp0jrtOPd
— News18 Tamil Nadu (@News18TamilNadu) March 5, 2025
செங்கோட்டையன் முன்பு மோதல்
குற்றசாட்டை முன்வைத்த நிர்வாகி முன்னாள் அமைச்சரிடம் பேசிக்கொண்டு இருக்க, பின்னால் வேறொரு தரப்பை சேர்ந்த நபர்கள் அவரை பிடித்து இருந்தனர். இதனால் செங்கோட்டையன் முன்னிலையிலேயே இருதரப்பு தாக்கிக்கொண்டது.
நாற்காலியை எடுத்து இருதரப்பு மோதலில் ஈடுபட்ட நிலையில், கட்சியினர் அவர்களை அமைதிப்படுத்தினர். முன்னாள் அமைச்சர் முன்பு நிர்வாகிகள் தாக்கிக்கொண்ட காரணத்தால், அதிமுக செயல் வீரர்கள் கூட்டம் பரபரப்பை சந்தித்தது.
இதையும் படிங்க: அதிமுக - தவெக கூட்டணி பேச்சுவார்த்தை? அரசியலில் யாரும் எதிர்பாராத தகவல் லீக்.!