ரவுடி கும்பல்களுக்கு இடையே மோதல்!.. பிரபல ரவுடி பலி!,, நடு ரோட்டில் பயங்கரம்..!

ரவுடி கும்பல்களுக்கு இடையே மோதல்!.. பிரபல ரவுடி பலி!,, நடு ரோட்டில் பயங்கரம்..!


fierce-clash-between-rowdies-popular-rowdy-murder

சென்னை, வேளச்சேரி அருகேயுள்ள பள்ளிக்கரணை பகுதியிலுள்ள அம்பேத்கர் குறுக்கு தெருவில் ரவுடிகள் சிலர் ஆயுதங்களுடன் மோதிக் கொள்வதாக பள்ளிக்கரணை காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவின் பேரில், சேலையூர் உதவி ஆணையர் முருகேசன், பள்ளிக்கரணை காவல் நிலைய ஆய்வாளர் குமார் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

அப்போது, அந்த தெருவில் இருந்த புதரில் மேடவாக்கம், புஷ்பா நகர் பகுதியை சேர்ந்த பிரைட் ஆல்வின் (30) என்பவர் தலை, கைகள் மற்றும் கால்களில் வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அங்கிருந்து சற்று தொலைவில் ஆல்வினின் நண்பர் பெருமாள் (23) என்பவரும் பலத்த வெட்டுக் காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இந்த நிலையில், ஆம்புலன்சை வரவழைத்த காவல்துறையினர், வெட்டுக்காயங்களுடன் உயிருக்கு போராடியவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர்.

அப்போது ஆம்புலன்சில் இருந்த மருத்துவ குழுவினர் இருவரையும் பரிசோதனை மேற்கோண்டதில், பிரைட் ஆல்வின் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து அவரை பிரேத பரிசோதனக்காகவும், பெருமாளை சிகிச்சைக்காகவும் தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதி, ஆல்வின் மீது பள்ளிக்கரணை உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் வழக்கு நிலுவையில் இருப்பது தெரியவந்தது.

மேலும் கஞ்சா விற்பனையில் ஏற்பட்ட போட்டி காரணமாக பிரைட் ஆல்வினுக்கும், அதே பகுதியை சேர்ந்த மணி என்பவருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கஞ்சா விற்பனை போட்டியால் இரு தரப்பினரும் கும்பலுடன் மோதியதில் கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதாவது காரணமா உள்ளதா என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.