வாழைப்பழத்தில் விஷம் வைத்து, தந்தையே இருமகன்களையும் கொன்ற வழக்கில் அதிரடி திருப்பம்! லட்சுமிதான் காரணமா?father-killed-son-poision-in-banana

மதுரை அலங்காநல்லூர் அரியூர் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தர். இவரது மனைவி இந்துமதி. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் உடல்நலம் சரியில்லாத நிலையில் உயிரிழந்துள்ளார். இந்த நிலையில், சுந்தர் தனது இரு மகன்களுக்கும் வாழைப்பழத்தில் விஷம் வைத்து கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில் அவர்கள் சுந்தரின் செல்போனை கைப்பற்றி ஆய்வு மேற்கொண்ண்டுள்ளனர். அதில் தற்கொலை செய்துகொள்வதற்கு முன் மதுபோதையில் சுந்தர், தனது வாழ்வில் நடந்த சம்பவங்களை வீடியோவாக எடுத்து வைத்துள்ளார்.

deadஅதில் அவர் தனது மனைவி இறந்த பின்னர் லட்சுமி என்கிற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, வீட்டிற்கு அழைத்து வந்து குடும்பம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் லட்சுமி சுந்தரின் மகன்களை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். மேலும் தொடர்ந்து  பணம் கேட்டும்  தொந்தரவு செய்து வந்துள்ளார். அதுமட்டுமின்றி சமீபத்தில் லட்சுமி சண்டைபோட்டுவிட்டு அவரது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால்  மனமுடைந்த சுந்தர் தனது மகன்களுக்கு வாழைப்பழத்தில் விஷம் வைத்துக்கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்யப்போவதாக கூறியுள்ளார்.

மேலும் தனது மனைவி உட்பட 4 பேரின் இறப்பிற்கு லட்சுமிதான் காரணமென சுந்தர் கூறியுள்ளார் .இந்நிலையில் சுந்தரின் மனைவி இறந்த விவகாரத்தில் போலீசார் சந்தேகம் அடைந்து லட்சுமி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.