தமிழகம்

பிறந்த குழந்தையை காணாமல் கதறிதுடித்த பெண்.! கணவர் செய்த மோசமான செயலால் காத்திருந்த பேரதிர்ச்சி!

Summary:

father killed female baby

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள சுந்தரேசபுரம் என்ற பகுதியை சேர்ந்தவர் வரதராஜன். இவரது மனைவி சவுந்தர்யா. இவர்கள் இருவருக்கும் திருமணமாகி ஒன்றரை வருடங்கள் ஆகிறது. இந்நிலையில் இந்த தம்பதியினருக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு பெண்குழந்தை பிறந்துள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் திடீர் என்று குழந்தை காணாமல் போயுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த சவுந்தர்யா பதறிப்போய் தனது உறவினர்களுடன் ஊர்முழுவதும் தேடியுள்ளார். அப்போது அங்குள்ள தென்பெண்ணை ஆற்றுப்பகுதியில் பள்ளம் ஒன்று காணப்பட்டுள்ளது.  அதனை கண்டு சந்தேகப்பட்ட உறவினர்கள் அப்பகுதியில் உள்ள  மண்ணை தோண்டிய போது, முழுவதும் துணியால் சுற்றப்பட்ட நிலையில் குழந்தை சடலமாக கிடந்துள்ளது.

       

அதனை தொடர்ந்து இதுகுறித்து போலீசாருக்கு தகவலளிக்கப்பட்ட நிலையில் அவர்கள் நடத்திய தீவிர விசாரணையில் முதல் குழந்தையே பெண்ணாக பிறந்ததால் வரதராஜன் மிகுந்த வெறுப்பில் இருந்துள்ளார். மேலும்  ஏற்கனவே குழந்தையை கொல்லவும் முயன்றுள்ளார் என்பது தெரிய வந்தது. 

அதனை தொடர்ந்து போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டபோது அவர்தான் பெண்குழந்தை என்பதால் குழந்தையை கொன்று சடலத்தை புதைத்ததாக  ஒப்புக்கொண்டார். இதையடுத்து திருக்கோவிலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வரதராஜனை கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement