கணவனை இழந்து 4 பிள்ளைகளுடன் வசித்துவரும் இளம்பெண்.! மாமனார் செய்த மோசமான செயல்.! அதிர்ச்சி சம்பவம்.!

கணவனை இழந்து 4 பிள்ளைகளுடன் வசித்துவரும் இளம்பெண்.! மாமனார் செய்த மோசமான செயல்.! அதிர்ச்சி சம்பவம்.!


father in law attacked daughter in law

தென்காசி மாவட்டம், கீழக் கடையம் குமரேசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது  மனைவி ஸ்ரீஜா. இந்த தம்பதிக்கு 4 குழந்தைகள் உள்ளனர். செந்தில்குமார் கடந்த 9 வருடங்களுக்கு முன்பாக இறந்து விட்டார். இதனால் மாமனார் சுப்பிரமணியன் வீட்டில் ஸ்ரீஜா வசித்து வந்துள்ளார்.

இந்தநிலையில் கடந்த ஒரு வாரமாக தனது தாயார் வீட்டிற்கு சென்று விட்டு நேற்று முன்தினம் வீட்டிற்கு வந்துள்ளார் ஸ்ரீஜா. அப்போது வீட்டில் உள்ள பாத்திரங்கள், பொருட்களை காணவில்லை என அவர் கேட்டார். இதில் ஆத்திரமடைந்த சுப்பிரமணியன் மருமகளை அவதூறாக பேசி, தன் பையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஸ்ரீஜாவின் கழுத்து பகுதியில் குத்தியதாக கூறப்படுகிறது. 

 ஸ்ரீஜாவின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் பலத்த காயமடைந்த  ஸ்ரீஜாவை தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இதுகுறித்து கடையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுப்பிரமணியனை கைது செய்தார். மருமகளுக்கு அப்பாவை போன்று பாதுகாப்பாக இருக்கவேண்டிய மாமனார், மருமகளை கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.