பெற்ற மகளை சீரழித்த தந்தை மீது குண்டர் சட்டம் பாய்ந்தது..!

பெற்ற மகளை சீரழித்த தந்தை மீது குண்டர் சட்டம் பாய்ந்தது..!


father charged by goondas act for made pragnant his daughter

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சிறுமி (17).  அவரது தந்தையால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கர்ப்பம் அடைந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.  

அந்த புகாரின் அடிப்படையில், அவரது தந்தையின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த ஆலங்குடி அனைத்து மகளிர் காவல்துறையினர் சிறுமியின் தந்தையை கைது செய்து புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் கைதான அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு, மாவட்ட காவல் ஆய்வாளர் வந்திதா பாண்டே பரிந்துரை செய்தார்.

பரிந்துரையின் அடிப்படையில், சிறுமியின் தந்தை மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டதை அடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுத்ததுடன்  அதற்கான நகலில் அவரிடம் காவல்துறயினர் கையெழுத்து பெற்றனர். இதன் பின்னர் அவரை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.