அரசியல் தமிழகம்

விவசாயிகளின் கடன் தள்ளுபடி.! அதிரடி அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர்.! உச்சகட்ட குஷியில் விவசாயிகள்.!

Summary:

கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய ரூ.12,110 கோடி பயிர்க்கடனை தள்ளுபடி செய்வதாக சட்டப்பேரவையில் முதல்வர் பழனிச்சாமி அறிவித்திருக்கிறார்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 110 விதியின் கீழ் பயிர்கடனை தள்ளுபடி செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். விவசாயிகள் இயற்கை பேரிடர் காரணமாக கடும் துயரத்திறகு உள்ளாகி உள்ளனர். இதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டிருந்தாலும் தற்போது கூட்டுறவு வங்கியில் இருக்கக்கூடிய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என விவசாய அமைப்பினர் கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்தநிலையில், கூட்டுறவு வங்கிகளில் 16.43 லட்சம் விவசாயிகளுக்கு 12,110 கோடி ரூபாய் பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி 110 விதியின் கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். 

இதற்கான உரிய நிதியை வழங்கி இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டு உடனடியாக இந்த கடன்களை தள்ளுபடி செய்வதற்கு அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என்பதை உறுதியாக தெரிவித்து கொள்வதாகவும் முதலமைச்சர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.


Advertisement