தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு என்ன சின்னம் தெரியுமா.?

தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு என்ன சின்னம் தெரியுமா.?



 farmer symbol for NTK

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. இதனையடுத்து செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு அக்டோபர் 6, 9-ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக நடக்க உள்ளது. இதனையடுத்து தேர்தலில் போட்டியிடுவதற்கான ஆயத்த பணிகளை அனைத்து கட்சிகளும் தீவிரப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை தமிழ்நாடு மாநில தேர்தல் அணையம் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலிலும் நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் தான் ஒதுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.