மாவட்ட ஆட்சியரிடம் பேட்டி எடுத்த பிரபல தொலைக்காட்சி நிருபருக்கு கொரோனா பாதிப்பு!

மாவட்ட ஆட்சியரிடம் பேட்டி எடுத்த பிரபல தொலைக்காட்சி நிருபருக்கு கொரோனா பாதிப்பு!



Famous reporter affected by corona

கேரளாவில் பிரபல தொலைக்காட்சி நிருபர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் பேட்டி எடுத்த கலெக்டர் தனிமைப்படுத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டார்.

கேரளாவில் தொலைக்காட்சிநிறுவனத்தில் பணியாற்றி வரும் ஊடகத்துறையை சேர்ந்த நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, சில நாட்களுக்கு முன்பு அவர் பேட்டி எடுத்த கேரள மாநிலம் காசர்கோடு மாவட்ட ஆட்சியர் தனிமைப்படுத்தப்பட்டார்.

corona

கேரளாவில் காசர்கோடு மாவட்ட ஆட்சியரிடம் பிரபல தொலைக்காட்சி சேனலை சேர்ந்த நிருபர் ஒருவர் கடந்த 19ந்தேதி பேட்டி எடுத்துள்ளார்.  இந்நிலையில், நிருபருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது நேற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் காரணமாக காசர்கோடு மாவட்ட ஆட்சியர், அவரது கார் ஓட்டுநர் மற்றும் பாதுகாவலர் என மூன்று பேரும் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இந்தியாவிலேயே, கேரளாவில் தான் முதன்முதலாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. ஆனாலும் தற்போது கொரோனாவை விரட்டியடிப்பதில் முன்னணி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. இந்நிலையில் கேரள மாநிலத்தில் நேற்று புதிதாக 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.