குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1000 திட்டம் எந்தந்த அட்டை தாரர்களுக்கு கிடைக்கும் தெரியுமா? முழு விவரம் இதோ....

குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1000 திட்டம் எந்தந்த அட்டை தாரர்களுக்கு கிடைக்கும் தெரியுமா? முழு விவரம் இதோ....


family women 1000 rupees

திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் பணம் வழங்கப்படும் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தது. இதேபோல் மேலும் பல வாக்குறுதிகளை தெரிவித்த தமிழக அரசு ஒவ்வொன்றாக நிறைவேற்றிவருகிறது. இந்நிலையில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் பணம் வழங்கப்படும் திட்டம் தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் விரைவில் அறிவிப்பார் எனவும், கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அதிகாரிகள் தரப்பில் சிலர் விளக்கம் அளித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. தமிழக அரசின் சலுகைகள் உரியவர்களுக்கு கிடைக்கும் வகையில் அவர்களின் வருவாயைப் பொறுத்து 5 வகையாக குடும்ப அட்டைகள் தரம் பிரிக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் உபயோகத்தில் இருக்கும் ரேஷன் அட்டை ஸ்மார்ட் காடுகளில் ரேஷன் அட்டைதாரரின் புகைப்படத்துக்கு கீழே PHH, PHH-AAY, NPHH, NPHH-S, NPHH-NC என 5 வகையான குறியீடுகள் உள்ளன.

PHH என்ற குறியீடு எண் கொண்ட குடும்ப அட்டைக்கு அரிசி உட்பட அனைத்துப் பொருட்களும் கிடைக்கும். PHH-AAYஎன்ற குறியீடு கொண்ட குடும்ப அட்டைக்கு 35 கிலோ அரிசி உட்பட அனைத்து பொருட்களும் கிடைக்கும். NPHH என்ற குறியீடு கொண்ட குடும்ப அட்டைக்கு அரிசி உட்பட அனைத்து பொருட்களும் கிடைக்கும்.

NPHH-S என்ற குறியீடு இருந்தால் அந்த குடும்ப அட்டைக்கு அரிசியைத் தவிர, சர்க்கரை உள்ளிட்ட மற்ற பொருள்கள் கிடைக்கும். NPHH-NC என்ற குறியீடு இருந்தால் எந்த பொருளுமே கிடைக்காது; இதை ஒரு அடையாளமாகவும், முகவரி சான்றாக மட்டுமே பயன்படுத்திக்கொள்ள முடியும்.

தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உதவித் தொகை வழங்கும் திட்டம் PHH, PHH-AAY, NPHH ஆகிய 3 வகையான குறியீடுகளில் ஏதேனும் ஒன்று உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும். NPHH-S, NPHH-NC ஆகிய 2 குறியீடுகளுக்கு வழங்கப்படமாட்டாது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனாலும், தமிழக அரசின் அறிவிப்பாணை வந்த பிறகுதான் முழு விவரங்கள் தெரியவரும். அதனால், யாரும் தேவையில்லாமல், ரேஷன் அட்டைகளில் குடும்பத் தலைவியாக பெயர் மாற்றம் செய்து விண்ணப்பிக்க வேண்டாம் என்று அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.