சாயம் பூசி விற்பனை செய்யப்படும் வெற்றிலைபாக்கு... பாக்கு பிரியர்களே உஷார்.. உணவுப்பாதுகாப்புத்துறை எச்சரிக்கை.!

சாயம் பூசி விற்பனை செய்யப்படும் வெற்றிலைபாக்கு... பாக்கு பிரியர்களே உஷார்.. உணவுப்பாதுகாப்புத்துறை எச்சரிக்கை.!


Fake Vetrilai Paku Alert

எங்கும் சாயம் எதிலும் சாயம் என்பதை போல வெற்றிலைப்பாகிலும் சாயத்தை ஏற்றிவிட்டு வியாபாரிகள் நூதன டெக்னீகை கையில் எடுத்துள்ள அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.

பளபளப்புடன் இருக்கும் அனைத்தும் தரமானது என்று அர்த்தம் இல்லை. இதனை வியாபார தந்திரமாக பயன்படுத்திக்கொள்ளும் வியாபாரிகள் செயற்கையான சாயத்தினை பூசி உணவுப்பொருளை விற்பனை செய்து வருகின்றனர். 

இதனால் தன்னை நம்பி வாங்கும் மக்களின் உடல்நலம் கேடாகும், உயிர் போகலாம் என்ற அச்சம் இருக்கிறது என்பது தெரிந்தும் அற்ப பணத்திற்காக அவ்வாறு செய்து வருகின்றனர். 

இவ்வாறான செயற்கை சாயத்திற்கு வெற்றிலை பாக்கும் தப்பிவிடவில்லை என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகிறது. சுப காரியத்தில் வெற்றிலை பயன்படுத்தப்படும் நிலையில், இயற்கையான வெற்றிலை பாக்கு நிறம் சற்று குறைவானதாக இருக்கும். 

இதுபோன்ற பாக்கு வியாபாரம் மந்தமாக இருப்பதாக கருதி வியாபாரிகள் சாயம் ஏற்றி பளபளப்பை அதிகரிக்கின்றன. இதனால் பல உடலில்நல பாதிப்புகள் ஏற்படும். அதனை தவிர்க்க பசுக்களை வணங்காமல் தவிர்க்க வேண்டும் அல்லது பாக்கை நீரில் சில நிமிடம் ஊறவைத்து கழுவி உபயோகம் செய்யலாம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 

மேலும், கலப்படம் தொடர்பான புகாரை தெரிவிக்க 94440 42322 என்ற வாட்சாப் எண்ணில் தகவல் தெரிவிக்கலாம் என திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.