தமிழகம்

பேஸ்புக் மூலம் ஏற்பட்ட காதல்.. காதலனை நம்பி சென்ற 15 வயது சிறுமிக்கு ஏற்பட்ட சோகம்.! கதறி துடிக்கும் பெற்றோர்.

Summary:

Facebook nabaral 15 vayathu sirumiku earpatta sogam

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சையத் இலியாஸ். இவருக்கும் கீழ் சாத்தமங்கலம் கிராமம், கம்பன் நகரை சேர்ந்த 15 வயது சிறுமிக்கும் பேஸ்புக் மூலம் நட்பு ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அவர்களது நட்பானது காதல் வரை சென்றுள்ளது.

இந்நிலையில் கடந்த 24 ஆம் தேதி சையத் இலியாஸ், சிறுமியை சந்திக்க வேண்டும் என கூறி வந்தவாசி புறவழி சாலையில் உள்ள சவுக் தோப்பிற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு சென்ற போது தான் சிறுமிக்கு தெரிந்துள்ளது சையத் இலியாஸ் தனியாக வரவில்லை நண்பர்களும் உடன் வந்திருப்பது.

அதனை அடுத்து அந்த மூன்று பேரும் சேர்ந்து சிறுமியை வழுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்து விட்டு தோப்பிலேயே விட்டு சென்றுள்ளனர். பின் என்ன செய்வது என்று புரியாமல் இருந்த அந்த சிறுமி கிழிந்த ஆடையுடன் அழுது கொண்டே வீட்டிற்கு சென்றுள்ளார்.

சிறுமியின் நிலையை பார்த்து கதறி துடித்த பெற்றோர் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து சிகிச்சை அளித்துள்ளனர். மேலும் தனிப்படை அமைத்து தலைமறைவான சையத் இலியாஸ் மற்றும் அவரது இரண்டு நண்பர்களான பரகத், சூர்யா ஆகிய மூவரையும் போக்கோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 


Advertisement