அரசியல் தமிழகம் TN Election 2021

தமிழகத்தில் வரும் 29ஆம் தேதி வரை தடை..! தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு.!

Summary:

ஒவ்வொரு தேர்தலின் வாக்கு பதிவு நடந்து முடிந்ததும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெள

ஒவ்வொரு தேர்தலின் வாக்கு பதிவு நடந்து முடிந்ததும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியாகும் என்பதும் அந்த கருத்துக் கணிப்பு ஓரளவுக்கு சரியாக இருந்து அதன்படிதான் ஆட்சி அமையும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தமிழகம், புதுவை மற்றும் கேரளா ஆகிய மூன்று மாநிலங்களுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று உள்ளது. ஆனால் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியாகவில்லை.

தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் ஒரே கட்டமாக நேற்று சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. ஆனால், மேற்கு வங்கத்திற்கு மூன்று கட்ட தேர்தல் மட்டுமே நடைபெற்று முடிந்துள்ளது. மேலும் 5 கட்ட தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இறுதிகட்ட தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 29-ஆம் தேதி நடைபெற உள்ளது. 

எனவே அன்றைய தினம் இரவு 7.30 மணிக்கு பின்னர் தமிழகத்தில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியிட வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதால் ஏப்ரல் 29ஆம் தேதி 7.30 மணிக்கு மேல் எக்ஸிட் போல் அதாவது தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது


Advertisement