வேட்டையன் ரூ.1000 கோடி வசூல்: மண்சோறு சாப்பிட்டு ரஜினி ரசிகர்கள் வழிபாடு.!
பரபரப்பு.. பணி முடிந்து வீடு திரும்பிய கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. போலீஸ் விசாரணை..!
கரூர் மாவட்டம் தோகைமலை பகுதியில் வசித்து வருபவர்கள் மாரியப்பன் - மீனா தம்பதியினர். இவர்களுக்கு திருமணமாகி ஏழு வருடங்கள் ஆன நிலையில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். மாரியப்பன் கொத்தனார் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் மாரியப்பன் வழக்கம்போல் கொத்தனார் வேலைக்காக திருச்சி சென்று பணி முடிந்து இரவு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டில் மனைவி மற்றும் குழந்தைகள் ஆகிய மூவரும் இல்லாததைக் கண்டு அதிர்சியடைந்த மாரியப்பன் அக்கம் பக்கத்து இடங்களில் தேடி உள்ளார்.
மேலும் மாரியப்பன் மனைவி மீனா தனது குழந்தைகளுடன் மதியம் மருத்துவமனைக்கு சென்று விட்டு வருவதாக கூறி வீட்டை விட்டு சென்றதாக அப்பகுதியில் உள்ளவர்கள் கூறியுள்ளனர். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் மூவரும் வீட்டிற்கு வராததை கண்டு அதிர்ச்சி அடைந்த மாரியப்பன் உடனடியாக போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து மாரியப்பன் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.