மித மிஞ்சிய மதுபோதை.. கொலை செய்து விடுவேன் என்று மிரட்டிய கணவர்.. மிரட்டலை உண்மையாக்கிய மனைவி..!



excessive-alcohol-addiction-the-husband-threatened-to-k

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அடுத்த கோவில்பட்டி ராஜாகுளம் பகுதியில் வசித்து வருபவர்கள் ராஜேந்திரன் - பாண்டீஸ்வரி தம்பதியினர். இவர்களுக்கு 4 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ராஜேந்திரன் வெளி மாநிலங்களுக்கு செல்லும் டிப்பர் லாரிகளை ஓட்டும் தொழில் செய்து வந்துள்ளார்.

இந்த சூழலில் மதுப்பழக்கத்திற்கு அடிமையான ராஜேந்திரன் எந்நேரமும் மது போதையில் இருந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் மது போதையில் மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும் சம்பவத்தன்று மனைவியிடம் மது வாங்குவதற்கு பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார்.

Crime

ஆனால் பாண்டீஸ்வரி பணம் தர மறுக்கவே ஆத்திரமடைந்து ராஜேந்திரன் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி உள்ளார். பின்னர் அங்கிருந்த கடப்பாரையை எடுத்துக்கொண்டு வந்த ராஜேந்திரன் மனைவி பாண்டீஸ்வரியை தாக்க முயற்சி செய்துள்ளார். அதற்குள் சுதாரித்துக் கொண்ட பாண்டீஸ்வரி தன்னை தற்காத்துக் கொள்வதற்காக கணவரிடம் இருந்த கடப்பாறையை பிடுங்கி அவரை திரும்ப தாக்கியுள்ளார்.

இந்த சம்பவத்தில் பலத்த காயம் அடைந்த ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே பலியானார். இதனையடுத்து பாண்டீஸ்வரி நத்தம் காவல் நிலையம் சென்று கணவனை கொலை செய்து விட்டதாக கூறி சரணடைந்தார். பின்னர் பாண்டீஸ்வரி கொடுத்த தகவலின் பேரில் நிகழ்விடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் ராஜேந்திரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.