தமிழகம்

கர்நாடக சிங்கம் என அழைக்கப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை! என்ன காரணம்? அவரை பற்றிய ஒரு சிறிய அலசல்!

Summary:

ex ips officer annamali history

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகாவில் உள்ள தொட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தான் அர்ஜுன் அண்ணாமலை. இவர் படிப்பில் கெட்டிக்காரர். விவசாய குடும்பத்தைச் சேர்ந்த இவர் 2007-ம் வருடம் கோவையில் பொறியியல் படிப்பை முடித்தார். பின்னர் லக்னோவில் உள்ள இந்திய மேலாண்மைப் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ படித்துள்ளார்.

அப்போது அவர் பார்த்த மும்பை ஹோட்டல் வெடிகுண்டு சம்பவம் இவரை போலீஸ் அதிகாரியாக மாறி தேசத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டியது. இதனையடுத்து சிவில் சர்வீஸ் தேர்வுக்குத் தயாராகி, தேர்வு எழுதி உள்ளார். முதல் முயற்சியிலேயே 2010-ம் ஆண்டு, ஐ.பி.எஸ்ஸாகத் தேர்வானார்.

முதன் முதலில் கர்நாடகம் கார்தலாவில் ஏ.எஸ்.பியாக பணியில் அமர்த்தப்பட்டார். ஒன்பது வருடங்கள் கர்நாடக மாநிலத்தில் தேசத்திற்காக பணி செய்தார். அங்கு மத மோதல் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தது, 7 முக்கிய நக்சலைட்களை சரணடைய வைத்து அமைதி வாழ்க்கைக்குத் திருப்பியது, ஐ.எஸ்.ஓ தரச்சான்றிதழ் பெற்ற காவல் நிலையங்களை உருவாக்கியது என பலவற்றை சிறப்பாக செய்து அரசாங்கத்திடம் பாராட்டை பெற்றார்.

இவர் சாமான்யர்கள் அளிக்கும் மனுக்களுக்கும் 7 நிமிடங்களில் எஃப்.ஐ.ஆர் போட வைத்து, ஒரே வாரத்தில் பிரச்னைகளைத் தீர்க்க உத்தரவாதம் ஏற்படுத்தியது, அங்கே உள்ள சாமான்யர்கள் இவரை நண்பனாகவும் பார்த்துள்ளனர். வன்முறையை அடக்குவதில் கெட்டிக்காரராக இருந்ததால் மக்கள் `கர்நாடக சிங்கம்' என்று இவருக்கு அடைமொழி கொடுத்திருக்கிறார்கள். 

இத்தகைய செயல்களை செய்துவிட்டு அந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு, சமூக அமைப்பு, இயற்கை விவசாயம், நாட்டு மாடுகளைக் காத்தல் என அவருக்கு பிடித்த வழியில் இறங்கினார். கல்வியில் அரசுப் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் ஆற்றலை மேம்படுத்த "WE THE LEADER " என்ற அமைப்பை உருவாக்கி மாணவர்களுக்கும் உதவி வருகிறார். மேலும் இயற்கை விவசாயம், கிராமத்தில் மருத்துவத்தை மேம்படுத்துதல், ஆடு வளர்த்தல் என அனைத்திலும் அசத்தலாக செயல்பட்டு வந்தவர் தான் அண்ணாமலை.

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை சமீபத்தில் பாஜகவில் இணைந்தார். அப்போது கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், "பாஜகவில் இணைந்ததில் நான் பெருமை அடைகிறேன். பாஜக சாதாரண மனிதனுக்கான கட்சி. இந்த கட்சி தமிழ்நாட்டில் 2021 ஆம் ஆண்டு நடக்கவுள்ள சட்டமன்ற தேர்தலில் திருப்பு முனை ஏற்படுத்தும் என தெரிவித்தார்.  


Advertisement