தமிழகம்

காதலிக்கு மறுத்ததால் இளம்பெண்ணின் கழுத்தில் கத்தியை காட்டி மிரட்டிய இளைஞன்! கடைசியில் நடந்தது என்ன தெரியுமா?

Summary:

Erode sivakumar

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே காதலிக்கமறுத்ததால் இளம்பெண்ணின் கழுத்தில் கத்தியை காட்டி மிரட்டி கொலை செய்ய முயன்ற இளைஞனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியுள்ளது.

பட்டமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சிவகுமார். இவர் சிக்காசம்பாளையத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவரை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து வந்துள்ளார். மேலும் இருவரும் போனில் பேசி வந்துள்ளனர். ஆனால் சில நாட்கள் கழித்து அந்த பெண் சிவக்குமாருடன் பேசுவதை நிறுத்தியுள்ளார்.

ஆனால் சிவக்குமார் அந்த பெண்ணுக்கு அடிக்கடி போன் செய்து தன்னிடம் பேசுமாறும், காதலிக்குமாறும் மிரட்டி வந்துள்ளார். திடிரென ஒரு நாள் அந்த பெண் பேருநந்திற்காக நின்று கொண்டிருந்த போது அவரின் கழுத்தில் கத்தியை காட்டி மிரட்டியுள்ளார்.

ஒரு கட்டத்தில் அந்த இளம்பெண்ணை கீழே தள்ளி கொலை செய்ய முயற்சித்துள்ளார். அப்போது அங்கு வந்த ஊர் மக்கள் அவரை தடுத்து போலீசில் புகார் கொடுத்துள்ளனர். பின்னர் சிவக்குமார் கைது செய்யப்பட்டார். இந்நிகழ்வு அந்த பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


Advertisement