வேன் கவிழ்ந்து கோர விபத்து.. 15 தொழிலாளர்கள் படுகாயம்., வேலைக்கு செல்கையில் நடந்த சோகம்.!

வேன் கவிழ்ந்து கோர விபத்து.. 15 தொழிலாளர்கள் படுகாயம்., வேலைக்கு செல்கையில் நடந்த சோகம்.!


Erode Sathyamangalam Van Accident

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம், வடவள்ளி கிராமத்தில் வசித்து வரும் 15 தொழிலாளர்கள் வாழைக்காய் வெட்டுவதற்கு வேனில் சாக்கிராசாம்பாளையம் கிராமத்திற்கு சென்றுகொண்டு இருந்தனர். இவர்களின் வாகனம் காலை 7 மணியளவில் வடவள்ளி முருகன் கோவில் பகுதியில் சென்றுகொண்டு இருந்தது. 

அந்த சமயத்தில், திடீரென வாகனத்தின் குறுக்கே நாய் புகுந்ததால், அதன் மீது வாகனம் மோதாமல் இருக்க ஓட்டுநர் பிரேக் போட்டுள்ளார். அப்போது, நிலைதடுமாறிய வாகனம் சாலையில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில், வேனில் இருந்த 15 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர். 

காயத்துடன் துடித்த தொழிலாளர்களை மீட்ட அக்கம் பக்கத்தினர், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து சத்தியமங்கலம் காவல் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் விபத்தில் காயமடைந்தோருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்தனர்.