அந்த டாப் நடிகையின் '50 வினாடி'க்கான சம்பளத்தை பார்த்து, மிரளும் திரையுலகம்.!
வீடுகளின் மீது கற்களை வீசிய ஆசாமி; மக்களின் தூக்கத்தை கெடுத்தவருக்கு ஊர்கூடி தர்ம அடி.!
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிசெட்டிபாளையம், சிங்கிரிபாளையம் பகுதியில் கடந்த சில வாரங்களாகவே இரவு நேரங்களில் கல்வீசி தாக்குதல் நடத்தப்படும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வந்தன.
இதனால் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தபோது, அதிகாரிகள் வந்து பார்வையிட்டு டிரோன் வாயிலாகவும் சோதனை செய்தனர். ஆனால், வானில் இருந்து விழும் கற்களை யார் வீசுகிறார்? என்ற கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை. அதிகாரிகள் வந்து சோதனையிட்டபோதே கற்கள் வீசப்பட்டன.
ஆசாமியை பிடித்த பொதுமக்கள்
மர்ம ஆசாமியின் செயலை உணர்ந்துகொண்ட பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர், குற்றவாளியை கையும் களவுமாக கைது செய்ய, கிராமம் முழுவதும் ஆங்காங்கே கேமிராக்களை வைத்து ஆய்வு செய்தனர். பொதுமக்களும் தங்கள் வீடுகளில் பாதுகாப்பு கருதி கேமிரா பொருத்தினர்.
இதையும் படிங்க: "சுத்தியலால் ஒரே அடி.." மகன் கண் முன்னே உல்லாசம்.!! தாயின் காதலனுக்கு நேர்ந்த பரிதாபம் முடிவு.!!
இந்நிலையில், அதே ஊரைச் சேர்ந்த திருமூர்த்தி என்பவரின் மகன் நிர்மல் ராஜ், வீடுகளின் மீது கற்களை வீசிவிட்டு பின் காட்டுப்பகுதிக்கு சென்று பதுங்கிக்கொள்வதை அவர் வாடிக்கையாக கொண்டுள்ளார். அவர் கல்வீச காரணம் என்ன? என விசாரணை நடந்து வருகிறது.
குற்றவாளியை கண்டறிந்த மக்கள், அவரை நையப்புடுடைத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்து இருக்கின்றனர்.
இதையும் படிங்க: துப்பாகிய ஏந்திய பாதுகாப்பை வழங்கிய காவல்துறையினர்; ஆம்ஸ்ட்ராங்கின் குடுமப்த்திற்கு மிரட்டல் கடிதம்.!