அந்த டாப் நடிகையின் '50 வினாடி'க்கான சம்பளத்தை பார்த்து, மிரளும் திரையுலகம்.!
துப்பாகிய ஏந்திய பாதுகாப்பை வழங்கிய காவல்துறையினர்; ஆம்ஸ்ட்ராங்கின் குடுமப்த்திற்கு மிரட்டல் கடிதம்.!
பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் கே.ஆம்ஸ்ட்ராங், கடந்த மாதம் 05ம் தேதி 6 பேர் கும்பலால் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை விவகாரத்தில் தற்போது வரை முக்கிய குற்றவாளிகள் சேர்த்து 21 பேர் கைது செய்யப்பட்டனர். இதனிடையே, அயனாவரம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவிக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது.
இதையும் படிங்க: நிஞ்சா ரேஸ் பைக் மோதி காவலர் பரிதாப பலி; சென்னையில் சோகம்.!
குழந்தையை கொலை செய்வதாக மிரட்டல்
அந்த கடிதத்தில், "ஆம்ஸ்ட்ராங்கின் கொலை வழக்கில் கைதான ஒருவரை விடுவிக்க வேண்டும். அவரை விடுவிக்காத பட்சத்தில், ஆம்ஸ்ட்ராங்கின் மகளை கடத்தி கொலை செய்வோம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இந்த விஷயம் குறித்து தகவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படவே, புகாரை ஏற்ற காவல்துறையினர் ஆம்ஸ்ட்ராங்கின் குடும்பத்திற்கு துப்பாக்கி ஏந்திய காவல்துறை பாதுகாப்பை வழங்கி இருக்கின்றனர்.
இதையும் படிங்க: கஞ்சா விற்பனைக்கு மறுப்பு தெரிவித்த ஏசி மெக்கானிக் கொடூர கொலை; கஞ்சா வியாபாரி கும்பல் பகீர் செயல்.!